Home நாடு புதிய தேசிய கார் உற்பத்தி நிறுவனம் – மகாதீர் அதிரடித் திட்டம்!

புதிய தேசிய கார் உற்பத்தி நிறுவனம் – மகாதீர் அதிரடித் திட்டம்!

976
0
SHARE
Ad

mahathirprotonகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், புதிதாக தேசிய கார் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் எண்ணம் தனக்கு இருப்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து மலேசியாவில் சீனாவின் முதலீடு என்ற மாநாட்டில் பேசிய மகாதீர், “புரோட்டானைப் பொறுத்தவரையில், அதன் பாகங்களை உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. கார்களுக்கு 4,000 பாகங்கள் தேவை. எனவே உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கார் உற்பத்தித் தொழிற்சாலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று மகாதீர் தெரிவித்தார்.