பெய்ஜிங் – சீனாவின் தென்கிழக்குப் பகுதியான புஜியான் வட்டாரத்தில், மிகப் பெரிய அரிய வகை சுறா மீன் ஒன்றை லோரியில் எடுத்துச் சென்று, பின்னர் அதனை வெட்டிக் கொன்ற சீன வாலிபரை அந்நாட்டு காவல்துறைக் கைது செய்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை, லோரி ஒன்றில் சுறா மீனை எடுத்துச் செல்வது போலான காணொளி ஒன்று சீனாவின் பல்வேறு நட்பு ஊடகங்களில் பரவியதையடுத்து அது குறித்து சீன காவல்துறை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்திருக்கிறது.
அழிந்து வரும் கடல் வாழ் உயிரங்களில் ஒன்றான சுறா மீனைப் பாதுகாக்க உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
அந்த வகையில், சீனாவும் அரிய வகை சுறா போன்ற கடல் வாழ் உயிரினங்களை விற்கவோ அல்லது அனுமதியின்றி எடுத்துச் செல்லவோ கூடாது எனக் கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.