Home இந்தியா அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்!

அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்!

1060
0
SHARE
Ad

Vijayசென்னை – மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்த அரியலூரைச் சேர்ந்த அனிதா, தனது மருத்துவக் கனவு பொய்யானதையடுத்து, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணம், தமிழகத்தில் பலரையும் மிகவும் பாதித்தோடு, நீட் தேர்வினால் இனி ஒரு உயிர் போகக் கூடாது என்று கூறி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அனிதா குடும்பத்தினரை அவர்கள் வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.