Home நாடு கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் காலமானார்!

கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் காலமானார்!

1395
0
SHARE
Ad

The-Yang-di-Pertuan-Agong-Tuanku-Abdul-Halim-Muadzam-Shahகோலாலம்பூர் -கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா தனது 89 வயதில் இன்று  திங்கட்கிழமை காலமானார்.

இன்று மதியம் 2.30 மணியளவில் அவர் காலமானதாக, ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த 1970-ம் ஆண்டு, முதன் முதலாக பேரரசராக அரியணையில் ஏறிய கெடா சுல்தான், அதன் பின்னர் 2012-ம் ஆண்டு மீண்டும் பேரரசராக அரியணையில் அமர்ந்து வரலாறு படைத்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தோடு அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிமுக்குப் பதிலாக, கிளந்தான் சுல்தான் முகமது v பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.