Home கலை உலகம் நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

939
0
SHARE
Ad

01ee113e-bac0-4fd6-ac65-6ed20896a9b61எர்ணாகுளம்,ஜன.18 திருமணமான ஒரு வருடத்திலே நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஷாலுடன் ‘சிவப்பதிகாரம்’, ரஜினியுடன் ‘குசேலன்’, மாதவனுடன் ‘குரு என் ஆளு’, அருண் விஜயுடன் ‘தடையற தாக்க’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், பல மலையாளப் படங்களிலும் நாயகியா நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.

மம்தா மோகன்தாசுக்கும் பக்ரைனில் தொழில் அதிபராக உள்ள பிரஜித் பத்மநாபனுக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கோழிக்கோட்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சில நாட்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னர் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனை மம்தா பிரிந்தார்.

#TamilSchoolmychoice

எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுபோல் பிரஜித்தும் விவாகரத்துக்கு சம்மதித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த வழக்கை ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள குடும்ப நல நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.