Home கலை உலகம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதைக்காக யாரும் பணம் தரவில்லை

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதைக்காக யாரும் பணம் தரவில்லை

975
0
SHARE
Ad

சென்னை : சமீபத் தில் வெளியான, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம், 1981ல் வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டைரக்டர் கே.பாக்யராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

‘இன்று போய் நாளை வா’ படத்தின் கதை உரிமை என்னிடம்தான் உள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்திக்கு படத்தின் கதையை நான்தான் விற்றேன். இப்போது தயாரிப்பாளரிட மிருந்து புஷ்பா கந்தசாமி யும், ராம.நாராயணனும் கதை உரிமையை பெற்றிருப்பதாகச் சொல்லி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 19ம் தேதி ராம.நாராயணன், சந்தானம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினேன். பதில் அளிக்கவில்லை. இதனால் வழக்கு தொடர்ந்துள்ளேன். நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் டைட்டில் கார்டில் என் பெயரை போட்டிருக்கிறார்கள். படத் தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

கதை என்னுடையதுதான் என்று நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகு எனக்கான நஷ்டஈடை கேட்பேன். படத்தை தடைசெய்யும்படி நான் கேட்கவில்லை. படம் வெளிவராமல் போனால் தயாரிப் பாளர் படும் கஷ்டத்தை அனுபவித்தவன் நான். இந்த நிலையில் நான் படம் தயாரிக்கும்போது உதவி செய்ததாகவும், இதற்காக பெரும் தொகை பெற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதுவரை யாரும் என்னிடம் பேசவும் இல்லை. ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கவும் இல்லை. சினிமா காதாசிரியர்களின் உரிமையை காக்கவும், எதிர்காலத்தில் எனது மற்ற படங்களுக்கு இந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காகவும் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.