Home 13வது பொதுத் தேர்தல் 13வது பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி ஆயத்தம்– நஜிப் தகவல்

13வது பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி ஆயத்தம்– நஜிப் தகவல்

717
0
SHARE
Ad

Slider-Najib---1கோலாலம்பூர், ஜனவரி 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடுகளும், வேட்பாளர்கள் தேர்வுகளும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன என பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புரிந்துணர்வும் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தேர்வு குறித்து மட்டும் தொடர்ந்து மேலும் கூடுதலான பரிசீலனைகள் நடைபெறுவதாகவும்  அவர் மேலும் கூறினார். தேசிய முன்னணி வேட்பாளர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டியிடுகின்ற தொகுதிகளில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் தொடர்ந்து பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இன்றிரவு நடைபெற்ற தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் நஜிப் செய்தியாளர்களிடம் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் 21ஆம் தேதியோடு நிறைவடைவதால், அந்த தேதிக்கு முன்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என்ற கேள்விக்கு, பொதுத் தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இவையெல்லாம் வெறும் ஆரூடங்களே என்றும் அவர் கூறினார்.

தங்களின் ஆய்வின் படி தேசிய முன்னணிக்கான ஆதரவு பெருகியுள்ளதற்கு பல குறியீடுகள் தென்படுகின்றன என்றும் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் நஜிப் மேலும் தெரிவித்தார்.