Home இந்தியா தி.மு.க செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த அழகிரி

தி.மு.க செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த அழகிரி

686
0
SHARE
Ad

img1130320029_1_1சென்னை, மார்ச் 25 – சென்னையி‌ல் இன்று நட‌ந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தை மத்திய மு‌ன்னா‌ள் அமைச்சர் அழகிரி புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அறிவாலயத்தில் இன்று காலை தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் கூட்டம் துவங்கும் முன்னதாக அழகிரி மதுரைக்கு புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு வரை சென்னையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க விலகிய பிறகு நடக்கும் முக்கியமான கட்சி செயற்குழு கூட்டத்தை அழகிரி புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.