Home நாடு தாமதமாகப் பிறப்புப் பத்திரம் பதிவு செய்தால் 1000 ரிங்கிட் அபராதம்!

தாமதமாகப் பிறப்புப் பத்திரம் பதிவு செய்தால் 1000 ரிங்கிட் அபராதம்!

833
0
SHARE
Ad

LOGO-JPNகோலாலம்பூர் – குழந்தை பிறந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் பதிவு செய்யாத பெற்றோருக்கு 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என தேசியப் பதிவிலாகா அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு இந்த அபராதம் 50 ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

“பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மற்றும் தத்தெடுக்கும் சட்டத்தில் (சட்டம் 299) கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அரசாங்கம் இந்த அபராதத்தொகையை அதிகரிக்க முடிவு செய்தது. எனவே குழந்தை பிறந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இந்த அபராதம் மூலம் பெற்றோர் அதிவேகமாக குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறோம். ஒருவேளை அவர்கள் தாமதமாகப் பதிவு செய்தால் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.எனவே பெற்றோர் இதனை லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என தேசியப் பதிவிலாகா தெரிவித்திருக்கிறது.