Home One Line P1 “போலி ஆவண வழக்கு தொடர்பான படங்களை வைத்து ஜேபிஎன்னை குறைக்கூறுவதா?”- ஜேபிஎன்

“போலி ஆவண வழக்கு தொடர்பான படங்களை வைத்து ஜேபிஎன்னை குறைக்கூறுவதா?”- ஜேபிஎன்

815
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீன நாட்டினருக்கு, மைகாட் விநியோகிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வந்த குற்றச்சாட்டுகளை தேசிய பதிவு இலாகா (ஜேபிஎன்) மறுத்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சீன நாட்டினருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பல மைகாட்டின் படங்களை உள்ளடக்கிய பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுவதை அது சுட்டிக் காட்டியது.

அவை கடந்த 2015-இல் பொய்யான ஆவணங்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட படங்கள் என்று ஜேபிஎன் விளக்கியது. கடந்த 2015-ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் இந்த ஆவண பொய் வழக்கு ஏற்கனவே தீர்க்கப்பட்டதாக ஜேபிஎன் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பரவலாகப் பகிரப்படும் மைகாட் அனைத்தும் போலியானவை என்று ஜேபிஎன் இங்கே குறிப்பிட விரும்புகிறது. அது இந்தத் துறையால் வெளியிடப்படவில்லை. அந்த மைகாட்டில் உள்ள எண், படம் மற்றும் கைரேகைகள் போன்ற ஒவ்வொரு தகவலும் ஜேபிஎன் அமைப்பில் இல்லைஎன்று அது குறிப்பிட்டுள்ளது.

குழப்பத்தையும், பொதுக் கோளாறையும் தவிர்க்க, அந்த படங்களை சமூக ஊடகங்களில் பரப்புவதை நிறுத்துமாறு ஜேபிஎன் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

பொறுப்பற்ற நபர்களால் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை ஜேபிஎன் நினைவூட்டுகிறது.” என்று அது தெரிவித்துள்ளது.