மலேசியாவில் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர், இரு நாட்டு குடியுரிமையை வைத்திருப்பதற்கு மலேசிய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை என தேசியப் பதிவு இலாகா முன்னதாக தெரிவித்திருந்தது. எவரேனும், இரட்டை குடியுரிமைகளை வைத்திருந்தால், அந்நபர் எதாவது ஒரு நாட்டின் குடியுரிமையை விட்டுவிட வேண்டும் எனவும் எது குறிப்பிட்டிருந்தது.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் 24 (1) கீழ், வேறு நாட்டினது குடியுரிமையைப் பெற்ற ஒரு நபரின் மலேசிய குடியுரிமையை மத்திய அரசு நிராகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments