மக்கள் தீ மூட்டுவதை தவிர்க்கக் கோரியதோடு, அவ்வாறு தீ மூட்டப்படும் போது புகைமூட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அது சுட்டிக் காட்டியது.
வெப்பக் காலங்களில் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என மக்களுக்கு பல முறைக் கூறியும் மக்கள் தொடர்ந்து குப்பைகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகளால் புகை மூட்டம் அதிகரித்து, தற்போது காற்று மாசுப்பட தொடங்கி உள்ளது என அது குறிப்பிட்டுள்ளது.
இயற்கையாக வெப்பத்தினால் விளை நிலங்களும், காடுகளும் எரிந்து போவதை சமாளிப்பதற்குள், மக்கள் வேண்டுமனே குப்பைகளை எரித்து நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கின்றனர் என அது கூறியது.
இதனிடையே, சிலாங்கூர் மட்டும் இல்லாது பிற மாநிலங்களிலும், வெப்ப அளவு கூடியுள்ளதோடு, காற்றின் தூய்மைகேடு சுகாதாரமற்ற நிலையை பதிவுச் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.