Home வணிகம்/தொழில் நுட்பம் பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!

பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!

1084
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது.

பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர், இக்ராம் முகமட் இப்ராகிம் கூறுகையில், பாகிஸ்தான் கார் உற்பத்தி நிறுவனமான அல்ஹஜ் ஆட்டோமோட்டிவ் மற்றும் புரோட்டோன் நிறுவனத்துடனான தொழிற்சாலை அமைப்பு குறித்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தாகியது எனக் கூறினார்.

நாளை வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் நடக்க இருக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மகாதீர் முகமட்டும், பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.