கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய இளைஞர், முகமட் ஹபிக் முகமட் தார்மிசி காலமானார் என்ற செய்தியை இன்று வியாழக்கிழமை, விஸ்மா புத்ரா உறுதிபடுத்தியது. இந்த வன்முறைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், மூன்று மலேசியர்களான முகமட் ஹபிக்கின் தகப்பனார் முகமட் தார்மிசி, ராகிமி அகமட் மற்றும் முகமட் நஸ்ரில் ஹிஷாம் ஓமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர்.
குடும்பத்தாரின் அனுமதியுடன், விஸ்மா புத்ரா இந்த துக்கச் செய்தியை பகிர்வதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.
பிரதமர் துறை அமைச்சரான டாக்டர் முஜாஹிட் யூசோப் அரசாங்கப் பிரதிநிதியாக கிரிஸ்ட்சர்ச்சுக்கு செல்வார் எனவும் குறிப்பிட்டிருந்தது. முகமட் ஹபிக்கின் இறுதி சடங்கிற்காக அரசாங்கம் எல்லா விதமான உதவிகளையும் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது.