ஆக்லாந்து: பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஐந்து புதிய அமைச்சர்களை தனது நிர்வாகத்தில் இணைத்துள்ளார். நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரான பிரியங்கா ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை பதவி ஏற்றார்.
இந்தியாவில் பிறந்த 41 வயதான பிரியங்கா, சிங்கப்பூரில் பள்ளிக்குச் சென்றார். தனது கல்வியை மேற்கொள்வதற்காக நியூசிலாந்து சென்றார்.
2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019- ஆம் ஆண்டில், அவர் இன சமூகங்களுக்கான அமைச்சரின் நாடாளுமன்ற தனியார் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் பணிப்புரிந்துள்ளார்.
அவர் நியூசிலாந்தின் முதல் இந்திய அமைச்சராவார்.