Home One Line P1 நவம்பர் 3 முதல் 5 வரை நாடாளுமன்ற அமர்வு 1 மணியுடன் நிறைவடையும்

நவம்பர் 3 முதல் 5 வரை நாடாளுமன்ற அமர்வு 1 மணியுடன் நிறைவடையும்

480
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று முதல் வியாழக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு முடிவடையும். இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த குரல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் மேலவை இரண்டிலும் கொவிட் -19 அச்சத்தைத் தொடர்ந்து சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் குரல் வாக்களிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மதியம் 1 மணிக்கு அமர்வை முடிப்பதற்கான முடிவு நாடாளுமன்ற விதி 12 (1) இன் படி என்று நடைமுறை சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் கூறினார்.

#TamilSchoolmychoice

செனட்டர் ஒருவரின் உதவியாளர் கொவிட் -19 க்கு சாதகமாக பரிசோதனை செய்ததாக அசார் கூறினார்.

நாடாளுமன்ற விதி 90 (2)- இன் கீழ், மக்களவை சிறப்பு அறை இன்று முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் காலை 11.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் தக்கியுடின் கூறினார்.