Home One Line P2 வியன்னா பயங்கரவாதம்: ஒருவர் மரணம், சந்தேக நபர் சுட்டுக்கொலை

வியன்னா பயங்கரவாதம்: ஒருவர் மரணம், சந்தேக நபர் சுட்டுக்கொலை

552
0
SHARE
Ad

வியன்னா: மத்திய வியன்னாவில் திங்கட்கிழமை மாலை ஒரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதனை ஆஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ், வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் என்று விவரித்தார்.

ஒருவர் இறந்ததாகவும், ஒரு காவல் துறை அதிகாரி உட்பட பலர் காயமடைந்ததாக காவல் துறை தெரிவித்தது.

இதற்கிடையில், ஒரு சந்தேக நபர் காவல் துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று வியன்னா காவல் துறை தங்கள் டுவிட்டர் கணக்கில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் கூறினார்.

15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர் எனவும் வியன்னா மாநகராட்சி மன்றத் தலைவர் மைக்கேல் லுட்விக் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

துப்பாக்கி ஏந்திய பல சந்தேக நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆறு வெவ்வேறு இடங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தனர்.

வியன்னாவின் யூத சமூகத்தின் தலைவர் ஒஸ்கார் டாய்ச் கூறுகையில், ஸ்டாட்டெம்பல் ஜெப ஆலயத்தின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறினார். ஆனால், ஜெப ஆலயமே தாக்குதலின் இலக்காக இருந்ததா என்பது தற்போது தெரியவில்லை என்று கூறினார்.