Home One Line P2 மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு சட்டவிரோத சிகரெட்டுகளை அனுப்பும் கும்பல்

மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு சட்டவிரோத சிகரெட்டுகளை அனுப்பும் கும்பல்

679
0
SHARE
Ad
படம்: நியூசிலாந்து சுங்க விசாரணை மேலாளர் புரூஸ் பெர்ரி. நன்றி: பிரட் பிப்ஸ்

ஆக்லாந்து: மலேசியாவில் இயங்கும் குற்றவியல் கும்பல் மூலம் சட்டவிரோத சிகரெட்டுகள் நாட்டிற்குள் நுழைவது குறித்து நியூசிலாந்து சுங்க சேவை வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு வாரங்களில் மட்டும் ஆக்லாந்தில் ஏழு மில்லியன் சிகரெட்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்டு பிற்பகுதி வரை மூன்று தனித்தனி பரிசோதனைகளில் 6.9 மில்லியன் சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் மலேசியாவிலிருந்து செயல்படும் அதே கும்பலுடன் இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று நியூசிலாந்து சுங்க சேவை விசாரணை மேலாளர் புரூஸ் பெர்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

“இது, நியூசிலாந்து தரத்தின்படி, பெரிய அளவிலானது. மலேசியாவிலிருந்து பெரிய கொள்கலன்களில் (சட்டவிரோத சிகரெட்டுகளை) இது போன்று பார்த்து எங்களுக்கு பழக்கமில்லை.” என்று பெர்ரி எப்எம்டியிடம் கூறினார்.

“பொதுவாக, நியூசிலாந்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் சீனாவிலிருந்து வந்தவை”

“ஆனால், இந்த (மலேசிய) நிகழ்வுகளில், சிகரெட்டுகள் கட்டுமானப் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சிகரெட்டுகளை மறைக்க அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன”

“இறக்குமதி செய்யப்பட்ட அளவு மற்றும் மறைக்கும் வகை, இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு ஒருங்கிணைந்த கடத்தல் அமைப்பாகும் என்பதையும் காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

மலேசிய சிகரெட் கடத்தல்காரர்கள் இருப்பது ஆச்சரியமளிப்பதாக பெர்ரி கூறியிருந்தாலும், மலேசிய கும்பல்கள் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை கடத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதால், இவ்வளவு பெரிய அளவில் சிகரெட்டுகளை கடத்துவதை சுங்க நிறுவனம் கண்டது இதுவே முதல் முறை என்று கூறினார்.

ஜூலை மாதம் ஆக்லாந்தில் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட உலோக பொருட்களின் அடுக்குகளுக்குள் 2.2 மில்லியன் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.