Home உலகம் பிளாஸ்டிக் சர்ஜரி மோகம்: தென்கொரியாவில் 3 பெண்கள் கைது!

பிளாஸ்டிக் சர்ஜரி மோகம்: தென்கொரியாவில் 3 பெண்கள் கைது!

958
0
SHARE
Ad

south-korea-surgeryசியோல் – தென்கொரியாவில் முகமாற்று அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்து கொண்ட சீனாவைச் சேர்ந்த 3 பெண்கள், தென்கொரியாவை விட்டு வெளியேற முயற்சி செய்த போது விமான நிலையத்தில் குடிநுழைவு இலாகாவால் தடுத்து வைக்கப்பட்டனர்.

கடப்பிதழில் உள்ள முகத்திற்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு விகாரமாக இருந்த முகத்திற்கும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால் குடிநுழைவு இலாகா அதிகாரிகள் அவர்களைத் தடுத்து வைத்தனர்.

அந்த மூன்று பெண்களின் புகைப்படத்தை சீனாவைச் சேர்ந்த தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜியான் ஹுவாஹுவா வெய்போ என்ற பக்கத்தில் பகிர்ந்து, “அவர்களின் தாய்க்கே அடையாளம் தெரியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice