Home கலை உலகம் ஜனவரி மாதம் ரஜினி, கமல் மலேசியா வருகிறார்கள்!

ஜனவரி மாதம் ரஜினி, கமல் மலேசியா வருகிறார்கள்!

1288
0
SHARE
Ad

Rajini Kamalகோலாலம்பூர் – வரும் 2018 ஜனவரி 6-ம் தேதி, மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கிரிகெட் போட்டியைத் துவங்கி வைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் மலேசியா வருகின்றார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக இந்த கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்தப்படவிருக்கிறது.

ரஜினி, கமலோடு இன்னும் பல நட்சத்திரங்களும் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசியாவில் நட்சத்திரக் கலை இரவும் நடத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் விஷால் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மலேசியா வந்த விஷால், முதன் முதலாக இதனை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.