Home கலை உலகம் வானவில்லில் அஸ்ட்ரோ வர்த்தக விழா கண்ணோட்டம்

வானவில்லில் அஸ்ட்ரோ வர்த்தக விழா கண்ணோட்டம்

927
0
SHARE
Ad

எதிர்வரும் தீபத் திருநாளை முன்னிட்டு அஸ்ட்ரோவின் 3-வது ‘அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளிக் கொண்டாட்டம் 2017’ ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

4 நாட்களுக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலை உலக பிரபலங்களான ராய் லட்சுமி, சாதனா சர்கம் மற்றும் ஹரிணியுடன் பல உள்ளூர் கலைஞர்களும் பங்கெடுத்தனர்.

astro-deepavali-program-13102017
அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மயிலாட்டம்

கலை நிகழ்ச்சிகள், விருதளிக்கும் விழாக்கள், மண்ணின் மைந்தர்களின் புதிய படைப்புகளின் நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்புகள் உட்பட இந்த விழாவில் புதையல் வேட்டை, நடனம், பாடல், பலகுரல் நிகழ்ச்சி (மிமிக்ரி) போன்ற பல போட்டிகளும் நடைபெற்றன.

#TamilSchoolmychoice

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் கண்ணோட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 13 முதல் அக்டோபர் 16 வரை அஸ்ட்ரோ 201 அலைவரிசையில் கண்டு களிக்கலாம்.

இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறும் இந்நிகழ்ச்சியின் வழி அஸ்ட்ரோ வர்த்தக விழாவின் சிறப்பு அம்சங்களை காணத் தவறாதீர்கள்.