Home நாடு பினாங்கு நிலச்சரிவு: மேலும் 11 பேர் மரணமடைந்திருக்கலாம்

பினாங்கு நிலச்சரிவு: மேலும் 11 பேர் மரணமடைந்திருக்கலாம்

1172
0
SHARE
Ad

lim guan eng-visit-tanjong bungah site-21102017ஜோர்ஜ் டவுன் : பினாங்கு தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இதுவரை 3 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 11 பேர் வரை நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த கட்டுமானப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவு குறித்து மாநில ஆளுநரின் உத்தரவுப்படி விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் அறிவித்திருக்கிறார்.

penang-tanjong bungah-landslide
பினாங்கு தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு

இதற்கிடையில் இந்தப் பகுதியில் மேலும் சுமார் அடுக்குமாடி வீடுகளுக்கான 10 கட்டுமானத் திட்டங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன என்றும் அதற்கான அனுமதிகள் ஒத்திவைக்கப்பட வேண்டுமெனவும் அறைகூவல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கடலோரங்களிலும் சில கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் இவையும் அபாயகரமானவை என்பதால், இவற்றுக்கான அனுமதிகள் மறுக்கப்பட வேண்டும் என்றும் ஜசெக தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினரான தே யீ சியூ வலியுறுத்தியுள்ளார்.

lim guan eng-tanjong bungah-landslide
லிம் குவான் எங் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தை நேற்று பார்வையிட்டபோது…