Home வணிகம்/தொழில் நுட்பம் சமையல் எண்ணெய் விலை ஏற்றமா? – அமைச்சு மறுப்பு!

சமையல் எண்ணெய் விலை ஏற்றமா? – அமைச்சு மறுப்பு!

689
0
SHARE
Ad

cooking-oil-bigstock-940x470கோலாலம்பூர் – சமையல் எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதாக, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அன்று வெளியான பழைய நாளிதழ் செய்தி ஒன்றை, சிலர் நட்பு ஊடகங்களில் பரவ விட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அது தற்போதைய புதிய செய்தியாக எண்ணிய மலேசியர்கள் சிலர், அதனைப் பகிர்ந்து வருவதோடு, அது குறித்து நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சகம் அச்செய்தி கடந்த ஆண்டு வெளிவந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

சிலர் விஷமிகள் செய்த வேலையால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதற்காக அமைச்சு வருத்தமும் தெரிவித்திருக்கிறது.