Home இந்தியா குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன!

குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன!

709
0
SHARE
Ad

Gujerat Mapபுதுடில்லி – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல்களின் முதல் கட்டம் டிசம்பர் 9-ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 14-ஆம் தேதியும் நடைபெறும்.

முதல் கட்டத் தேர்தலின்போது 89 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களும், இரண்டாம் கட்டத் தேர்தல்களின்போது 93 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களும் நடைபெறும்.

#TamilSchoolmychoice

2.21 கோடி வாக்காளர்கள் குஜராத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்படும்.