Home அரசியல் வேண்டுமானால் நேரடி அரசியலுக்கு வாருங்கள் – மைக்கியைப் பயன்படுத்தாதீர்கள் – ஈஸ்வரனுக்கு ராமசாமி சவால்!

வேண்டுமானால் நேரடி அரசியலுக்கு வாருங்கள் – மைக்கியைப் பயன்படுத்தாதீர்கள் – ஈஸ்வரனுக்கு ராமசாமி சவால்!

638
0
SHARE
Ad

ramasamyபினாங்கு, மார்ச் 26- ஏதாவது  ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி என்னுடன் நேருக்கு நேருக்கு நேர் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா?  என்று பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி டத்தோ கென்னத் ஈஸ்வரனுக்கு நேற்று சவால் விடுத்தார்.

“என்னுடன் நேருக்கு நேர்  போட்டியிட தைரியம் இருந்தால் போட்டியிட்டுப்பார். அதை விடுத்து கோழைத்தனமாக மைக்கி பெயரை பயன்படுத்தி மோதுவதை நிறுத்திக் கொள்ளும்படி” கென்னத் ஈஸ்வரனுக்கு டாக்டர் ராமசாமி எச்சரித்தார்.

மலேசிய இந்தியர் வர்த்தக சம்மேளனம் என்பதைத்தான்  சுருக்கி  மைக்கி என்று அழைக்கப்படுகிறது. இந்திய தொழில் முனைவர்களின் உயர்வுக்காகவும் வர்த்தகர்களின் உயர்வுக்காகவும் கொண்டு படைக்கப்பட்டது. இது அரசியல் கட்சியல்ல.

#TamilSchoolmychoice

kenneth-eswaranடத்தோ கென்னத் ஈஸ்வரன் ஓர் அரசியல்வாதியைப்போல் என்னையும் மக்கள் கூட்டணித் தலைவர்களையும் சாடியுள்ளார். கென்னத் ஈஸ்வரனுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் உறுப்பியம் பெற்று அல்லது ஓர் அரசியல் கட்சியை தொடங்கி என்னுடன் நேருக்கு நேர் போட்டியிட  வேண்டும் என்று வன்மையாக கூறினார் ராமசாமி.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் ரப்பர் முத்திரையாக நான் இருப்பதாகவும் பினாங்கு மாநில இந்தியர்களுக்கு நான் ஒன்றுமே செய்ததில்லை என்றும் கென்னத் ஈஸ்வரன் சாடியுள்ளார்.

துணை முதல்வர் என்ற முறையில் பினாங்கு இந்தியர்களுக்கு என்ன செய்திருக்கின்றேன் என்பது பினாங்கு மக்களுக்கு தெரியும். அதைப்பற்றி கென்னத் ஈஸ்வரன் புலம்ப வேண்டாம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள், இந்து கோவில்கள் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு என்ன செய்திருக்கின்றேன் என்று என்னால் பட்டியலிட்டு காட்ட முடியும். பினாங்கு மாநில இந்திய வர்த்தகர்களுக்கு  கென்னத் ஈஸ்வரன் என்ன செய்துள்ளார் என்று அவரால் பட்டியலிட்டு காட்ட முடியுமா?

தொடர்ந்து, கம்போங் புவா பாலா பற்றி கென்னத் ஈஸ்வரன் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அங்குள்ள மக்களுக்கு இரட்டை மாடி பங்களா வீடுகளை பெற்றுத் தந்துள்ளோம். இன்று அந்த வீட்டின் மதிப்பு 8 லட்சத்தை எட்டியுள்ளது. கம்போங் புவா பாலாவிற்குச் சென்று அங்கு குடியிருக்கும் இந்தியர்களை நேரில் சந்தித்து விட்டு கென்னத் ஈஸ்வரன் பேட்டிக் கொடுக்க வேண்டும்  என்று டாக்டர் இராமசாமி பதிலடி கொடுத்தார்.