Home வணிகம்/தொழில் நுட்பம் ‘மைக்கி’ தலைவர் தேர்தலில் கென்னத் ஈஸ்வரன் தோல்வி

‘மைக்கி’ தலைவர் தேர்தலில் கென்னத் ஈஸ்வரன் தோல்வி

1639
0
SHARE
Ad
வெற்றி பெற்ற கோபாலகிருஷ்ணனுடன் மற்ற பொறுப்பாளர்கள்

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற மைக்கி (MAICCI) எனப்படும் மலேசிய இந்தியர் தொழிலியல் வர்த்தக சபையின் தலைவருக்கான தேர்தலில் நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த வணிகப் பிரமுகர் டத்தோ கோபாலகிருஷ்ணன் 111 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். கென்னத் ஈஸ்வரனுக்கு 76 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

துணைத் தலைவருக்கான தேர்தலில்105 வாக்குகள் பெற்று டத்தோ இராஜசேகரன் வெற்றி பெற்றார். ஷார் சுந்தர் 81 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

மைக்கியின் தலைமைச் செயலாளராக வெற்றி பெற்ற ஏ.டி.குமாரராஜா

மூன்று உதவித் தலைவர்களுக்கான போட்டியில் டத்தோ சுப்ரமணியம், எம்.கேசவன், டாஹ்லிப் சிங் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

மைக்கியின் தலைமைச் செயலாளராக டத்தோ ஏ.டி.குமாரராஜா 109 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிருஷ்ணன் 75 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பொருளாளராக ஸ்ரீகாந்த் 102 வாக்குகளில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குமரசாமி 82 வாக்குகள் மட்டுமே பெற்றார்.