Home நாடு மஇகா தேர்தல்: உதவித் தலைவர் போட்டியில் டி.மோகன், இராமலிங்கம், முருகையா, அசோஜன் முன்னணி

மஇகா தேர்தல்: உதவித் தலைவர் போட்டியில் டி.மோகன், இராமலிங்கம், முருகையா, அசோஜன் முன்னணி

1422
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில், டத்தோ டி.மோகன் முன்னணி வகிக்க, அவரைத் தொடர்ந்து ஏ.கே.இராமலிங்கம், டத்தோ எம்.அசோஜன், டத்தோ டி.முருகையா ஆகிய மூவரும் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக பின்தொடர்கின்றனர்.

இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட நால்வரில் மூவர் உதவித் தலைவர்களாக வெற்றி பெறுவர் என முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்.

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை மஇகா தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாடு முழுமையிலும் நடைபெற்றது. தற்போது தொகுதி நிலையில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுத் தலைமையகத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.