Home நாடு மஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன் முன்னணி

மஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன் முன்னணி

1724
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னணி வகிக்கிறார் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை வாக்களிப்பு நாடு முழுமையிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுத் தலைமையகத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இரவு 8.45 மணி வரையில் எண்ணப்பட்ட வாக்குகளில் சரவணன் 2,847 வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் டான்ஸ்ரீ எம்.இராமசாமி 1,090 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதாகவும் மஇகா வட்டாரங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்தன.