Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய பாதையில் வர்த்தக சங்கம் செயல்படும் – தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிவிப்பு

புதிய பாதையில் வர்த்தக சங்கம் செயல்படும் – தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிவிப்பு

1376
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (Malaysian Indian மைக்கி) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ ஏ.டி.குமாரராஜா உள்ளிட்ட புதிய செயலவையினர் இன்று புதன்கிழமை மாலையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து வர்த்தக சம்மேளனத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்தும், தாங்கள் செல்லவிருக்கும் புதிய பாதை குறித்தும் விளக்கமளித்தனர்.

கடந்த சனிக்கிழமை அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தேர்தலில் கோபாலகிருஷ்ணன் நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனைத் தோற்கடித்தார்.

கோபாலகிருஷ்ணன் தலைமையில் மைக்கியின் புதிய செயலவையினர்

துணைத் தலைவருக்கான தேர்தலில் டத்தோ ஆர்.இராஜசேகரன், 3 உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ சுப்பிரமணியம் நாச்சியப்பன், கேசவன் முனுசாமி மற்றும் டத்தோ டாஹ்லிப் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

தலைமைச் செயலாளராக டத்தோ ஏ.டி.குமாரராஜா தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைமைச் செயலாளராக நஜ்மி அப்துல்லாவும், பொருளாளராக ஸ்ரீகாந்த் செபஸ்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் போட்டியிடும் வேளையில் தாங்கள் முன் வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாங்கள் முழு மூச்சுடன் பாடுபடப் போவதாகவும் அறிவித்த கோபாலகிருஷ்ண்ன், முதல் கட்டமாக இந்திய அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனையைக் கையாளுவோம் என்றும் இந்திய வணிகங்கள் தொடர்பில் பிரதமருடனும், மற்ற இந்திய அமைச்சர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும் அறிவித்தார்.

மைக்கியின் புதிய தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன்

கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் சில பின்வருமாறு:-

  • தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் 2 தவணைகள் அல்லது 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாகப் பதவியில் இருப்பார்.
  • மாநில வர்த்தக சங்கங்களுக்கு சரிசம அந்தஸ்து அளித்து அவர்களை வலுப்படுத்துதல்
  • இந்தியர்களின் சிறுதொழில் வணிகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சி பெறச் செய்தல்
  • மகளிர் மற்றும் இளைஞர்களின் வணிகப் பங்கேற்புக்கு ஆதரவளித்து ஊக்குவித்தல்
  • மின்னியல் தொழில்நுட்பம், அறிவாற்றல் திறன்களை வளர்த்தல், போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துதல்
  • ஆண்டுதோறும் சிறந்த வணிகங்கள், வணிகர்களுக்கான விருதுகள் வழங்குதல்
  • மைக்கி சொந்த வருமானத்தில் தனித்து வலுவுடன் இயங்கும் பொருட்டு, நேரடியாக வணிகத்தில் ஈடுபடும் வழிவகைகளை ஆராய்தல்