சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன்னுடன் பல ஆண்டுகளாக நன்றி விஸ்வாதத்துடன் இருந்த தோழி சசிகலாவை, எந்த விதப் பாதுகாப்பும் இன்றி நிர்கதியாக நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார் என சசிகலாவின் சகோதரரான திவாகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சசிகலாவுக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்றும், இந்த விசயத்தில் சசிகலாவின் வாழ்க்கையை மற்ற பெண்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திவாகரன் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் தனது சகோதரி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்து சிறை சென்றிருப்பதால் அதிருப்தி அடைந்திருக்கும் திவாகரன், அடுத்தத்தடுத்து தனது வீடுகளில் நடக்கும் வருமானவரிச் சோதனைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
அதனால் தான் இவ்வாறு திவாகரன் பேசுகிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.