Home நாடு மூவாரில் தங்கும்விடுதி உணவு சாப்பிட்ட 110 பேர் பாதிப்பு!

மூவாரில் தங்கும்விடுதி உணவு சாப்பிட்ட 110 பேர் பாதிப்பு!

863
0
SHARE
Ad

fish_seafood_1மூவார் – மூவாரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த 110 மாணவர்களும், ஆசிரியர்களும், தங்கும்விடுதியில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளியின் நிறைவு விழாவைக் கொண்டாட படைக்கப்பட்ட விருந்து உபசரிப்பில், இச்சம்பவம் நடந்ததாக ஜோகூர் சுகாதாரம், சுற்றுச்சூழல், தகவல் மற்றும் கல்வி கமிட்டியின் தலைவர் டத்தோ ஆயுப் ராஹ்மாட் தெரிவித்திருக்கிறார்.

கடல் உணவுகள் சாப்பிட்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும், தங்கும்விடுதியின் சமையலறை 3 நாட்களுக்கு மூடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் ஆயுப் ராஹ்மாட் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice