Home நாடு சாஹிட்டைச் சந்திக்கச் சென்ற பக்காத்தான் தலைவர்கள் ஏமாற்றம்!

சாஹிட்டைச் சந்திக்கச் சென்ற பக்காத்தான் தலைவர்கள் ஏமாற்றம்!

946
0
SHARE
Ad

mahathir-zahid-comboபுத்ராஜெயா – பக்காத்தான் கூட்டணிக்கு, சங்கங்களின் பதிவிலாகா இன்னும் அனுமதியளிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்ப இன்று திங்கட்கிழமை பக்காத்தான் தலைவர்கள் புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்றனர்.

இன்று காலை 10.45 மணியளவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் காலை 10.45 மணியளவில் உள்துறை அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்றனர்.

எனினும், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹ்டி ஹமீடியை அவர்கள் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

“நாங்கள் மிகவும் அதிருப்தியடைந்திருக்கிறோம். நாங்கள் அமைச்சரைச் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். என்னுடன் பக்காத்தான் தலைவர்களும் வந்தனர். நாங்கள் வருவது அமைச்சிற்கும் தெரியும்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடிக்கு வேறு ஒரு சந்திப்பு இருப்பதால் அவரால் தங்களைச் சந்திக்க முடியவில்லை என்று கூறப்பட்டதாக மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.