Home கலை உலகம் அஸ்ட்ரோ ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ வழங்கும் புதிய நிகழ்ச்சிகள்!

அஸ்ட்ரோ ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ வழங்கும் புதிய நிகழ்ச்சிகள்!

2164
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவை, வாடிக்கையாளர்களுக்கு என்ன நிகழ்ச்சிகள் தேவை?, எப்போது தேவை? மற்றும் எங்கே தேவை? ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுப் போக்கு அம்சங்களை உள்ளடக்கிய புதிய நிகழ்ச்சிகளை டிசம்பர் மாதம் வழங்கின்றது.

MOTU PATLU SEASON 1_1 (002)1.மோட்டு பட்லு – அனிமேஷன் தொடராகும். ஃபர்ஃபுரி நகரைச் சேர்ந்த மோட்டு மற்றும் பட்லு இரு கதாபாத்திரங்களின் கதையாகும். மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலம்.

Enna Seiya Pogirai (2)2.என்ன செய்ய போகிறாய் – மலேசிய மக்களிடம் நடத்தப்பட்ட ‘social experiments’ இந்நிகழ்ச்சியில் ஒளியேறும்.

#TamilSchoolmychoice

Bommi Good and bad tuch 1 (002)3.பொம்மி குட் டச் பேட் டச் – குழந்தைகளிடம் நல்லது மற்றும் கெட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளிகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

4.பயமா இருக்கு – இத்திரைப்படத்தில் ஹீரோ சந்தோஷ், ஹீரோயின் ரேஷ்மி மேனன், ஹீரோவுக்கு இலக்கையில் அறிமுகமாகும் நான்கு நண்பர்கள் மொட்டை ராஜேந்திரன், ஜெகன், ஜீவா மற்றும் பரணி. இவர்கள் ஹீரோவின் சொந்த ஊரான கேரளாவில் தங்குகின்றனர். அங்கு அவர்களுக்கு சில அனுமாஷ்ய சில விஷயங்கள் நடக்கிறது.

K.K.K. Abathin Arikuri5.கா கா கா ஆபத்தின் அறிகுறி –  அசோக், மேகாஸ்ரீ, கிரண், நாசர், பேபி யுவினா ஆகியோர் நடிப்பில் மேனன் இயக்கத்தில் ஹாரர், திகில் கலந்த படமாகும். மேகாஸ்ரீயை யாரோ கொல்ல முயற்சி செய்வதை நண்பர் கிரணிடம் சொல்கிறார். இதனால், அவருடையை அறையை சுற்றி கேமரா பொருத்துகிறார். அதில் குழந்தை யுவினா, மேகாஸ்ரீயை கொலை செய்ய முயற்சிப்பதை தெரிந்துக் கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.