Home நாடு மகாதீருக்கு கடுமையான காய்ச்சல் – முக்ரிஸ் தகவல்!

மகாதீருக்கு கடுமையான காய்ச்சல் – முக்ரிஸ் தகவல்!

866
0
SHARE
Ad

MAHATHIR_MOHAMED - 1கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவராகிய துன் டாக்டர் மகாதீர் முகமது கடந்த ஒரு வாரமாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகனும், பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ முக்ரிஸ் மகாதீர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதனால் மருத்துவர்களின் அறிவுரைப் படி அவரால் தற்போது நிகழ்ச்சிகளில் பெங்கேற்க முடியவில்லை என்றும் முக்ரிஸ் தெரிவித்தார்.

இதனிடையே, 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரையும், இடைக்காலத் துணைப் பிரதமராக பிகேஆர் கட்சித் தலைவியும், அன்வார் இப்ராகிமின் மனைவியுமான டத்தின்ஸ்ரீ வான் அசிசாவையும் நியமிக்க அந்தக் கூட்டணி முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.