இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் விஷால் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தான் அரசியல்வாதி அல்ல என்றும், மக்களின் பிரதிநிதியாகவே தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தேர்தலில் தான் கட்டாயம் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகக் கூறிய விஷால், மக்களின் ஆதரவுத் தனக்குக் கட்டாயம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments