Home உலகம் பிலிப்பைன்சில் 251 பயணிகளுடன் படகு கவிழ்ந்தது!

பிலிப்பைன்சில் 251 பயணிகளுடன் படகு கவிழ்ந்தது!

1068
0
SHARE
Ad

Ferrysankphilippinesமணிலா – பிலிப்பைன்சின் கியூசோன் கடற்பகுதியில், 251 பயணிகளுடன் இன்று வியாழக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.

இச்சம்பவத்தில் பயணிகள் பலர் நீரில் மூழ்கிவிட்டதாகவும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

என்றாலும், பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கிறது. ஆனால் நாங்கள் இன்னும் உறுதியான தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.