Home கலை உலகம் டிசம்பர் 31-ல் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்: ரஜினி

டிசம்பர் 31-ல் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்: ரஜினி

742
0
SHARE
Ad

Rajiniசென்னை – ராகவேந்திரா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது ரசிகர்கள் முன் பேசிய ரஜினிகாந்த், தனது பிறந்தநாளின் போது சந்திக்க முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

என்றாலும், இப்போது சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ரஜினி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வரும் டிசம்பர் 31-ம் தேதி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று ரஜினி தெரிவித்தார்.