Home நாடு தேசிய இலக்கியவாதி டாக்டர் ஷானோன் அகமட் காலமானார்!

தேசிய இலக்கியவாதி டாக்டர் ஷானோன் அகமட் காலமானார்!

782
0
SHARE
Ad

Dr.Shanonகோலாலம்பூர் – தேசிய இலக்கியவாதி டத்தோ டாக்டர் ஷானோன் அகமட் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 5 நாட்களாக நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த தனது தந்தை இன்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானதாக ஷானோனின் மகன் அஸ்ரோல் ஷானோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில், தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ஷானோன், கடந்த 1982-ம் ஆண்டு, தேசிய இலக்கிய விருது பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கெடா நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் வேட்பாளராக வெற்றி பெற்ற ஷானோன். அடுத்தடுத்த வந்த தேர்தல்களில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை.

மேலும், நாவலாசிரியரான ஷானோன், 1976-ல் இலக்கிய சாம்பியன் விருதும், 1990-ல் ஆசியான் இலக்கியப் பரிசும், 2010, 2011-ல் மாஸ்டெரா இலக்கிய விருதும் பெற்றிருக்கிறார்.