இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்ததை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் (யுஎன்) ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மலேசியா உட்பட 128 நாடுகள் அமெரிக்காவின் அங்கீகாரத்திற்கு எதிராக வாக்களித்தன.
மேலும், 35 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொண்டன.
அதேவேளையில், 9 நாடுகள் இம்முடிவுக்கு எதிராக வாக்களித்தன.
வாக்கெடுப்பில் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றன.