Home நாடு மலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு!

மலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு!

909
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – மலேசியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கைக் கைது செய்யும் படி இந்தியா கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் மலேசியக் காவல்துறை ஜாகிர் நாயக்கைக் கட்டாயம் கைது செய்யும் என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இந்தியாவிலிருந்து அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்பதையும் முகமது ஃபுசி ஹாருன் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவின் தேசிய விசாரணை முகமை விரைவில் ஜாகிர் நாயக்கைக் கைது செய்ய மலேசியாவிற்குக் கோரிக்கை விடப்போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, மலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.