ஜார்ஜ் டவுன் – புத்தர் சிலையைத் திருடிய நண்பர்கள் இருவருக்கு பினாங்கு நீதிமன்றம் தலா 7,500 ரிங்கிட் அபராதம் விதித்ததோடு, 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கியது.
ஜாலான் அன்சானில் உள்ள பினாங்கு புத்த சங்கத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் இருந்த புத்த சிலையை கடந்த டிசம்பர் 11-ம் தேதி, இரவு 8.30 மணியளவில் லிம் சு சின் (வயது 29), லிம் கெங் லியாங் (வயது 37) ஆகிய இருவரும் திருடியதற்காக, நீதிபதி ஷாசிராதுல் ஜனா உஸ்மானி ஒத்மான் இத்தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தார்.
‘உறங்கும் புத்தர்’ என்றழைக்கப்படும் அப்புத்தர் சிலை வெள்ளை நிற மார்பிலால் உருவாக்கப்பட்டது என்றும், 90 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகின்றது.