Home நாடு 3 ஆண்டுகளுக்கு மின்சார விலையில் மாற்றமில்லை!

3 ஆண்டுகளுக்கு மின்சார விலையில் மாற்றமில்லை!

980
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தீபகற்ப மலேசியாவில் மின்சாரத்திற்கான விலையில் எந்த மாற்றமும் இல்லையென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளையில் சபா, லாபுவானில் வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மின்சார விலையில் மாறுதல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தீபகற்ப மலேசியாவில் ஒரு கேவிஎச் (Per Kilowatt-hour) 38.53 காசுகள் என்றும், சபா, லாபுவானில் ஒரு கேவிஎச் (Per Kilowatt-hour) 34.52 காசுகள் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதனை அரசாங்கமும் அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.