Home இந்தியா 31-ம் தேதி ரசிகர்களை தியானம் செய்யச் சொல்லுவார் ரஜினி – நாஞ்சில் சம்பத் கிண்டல்!

31-ம் தேதி ரசிகர்களை தியானம் செய்யச் சொல்லுவார் ரஜினி – நாஞ்சில் சம்பத் கிண்டல்!

957
0
SHARE
Ad

Nanjil Sampathசென்னை – இன்று தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, வரும் டிசம்பர் 31-ம் தேதி, தனது அரசியல் முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டிடிவி. தினகரன் ஆதரவாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் ரஜியின் அறிவிப்புக் குறித்து கூறியிருக்கும் கருத்தில், “31-ம் தேதி ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த முடிவை அறிவிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ்நாடு என்பது திராவிட அரசியலின் கோட்டை. அதில் அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்துவிட முடியாது. டிசம்பர் 31-ம் தேதி, ரஜினிகாந்த் தனது ரசிகர்களை தியானம் செய்யச் சொல்லப் போகிறார்” என்று கிண்டலாகத் தெரிவித்திருக்கிறார்.