Home வணிகம்/தொழில் நுட்பம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கும் வாட்சாப்!

மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கும் வாட்சாப்!

1339
0
SHARE
Ad

whatsapp (1)ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்சாப் செயலி, வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல், சில குறிப்பிட்ட இயங்குதளங்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘பிளாக்பெரி இயங்குதளம்’, ‘பிளாக்பெரி 10’, ‘விண்டோஸ் போன் 8.0’ மற்றும் இன்னும் சில பழைய இயங்குதளங்களில் வாட்சாப் வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவிருக்கிறது.

ஜனவரி 2018 முதல் அது போன்ற இயங்குதளங்களில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் வாட்சாப் செயலியைப் புதுப்பிக்கவோ அல்லது புதிதாக கணக்கு தொடங்கவோ முடியாது என்றும் வாட்சாப் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice