Home தேர்தல்-14 14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!

14-வது பொதுத்தேர்தல்: நூருல் இசா எடுத்திருக்கும் மிக முக்கிய முடிவு!

1128
0
SHARE
Ad

Nurul izzah anwarகோலாலம்பூர் – வரும் பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வான் அசிசா வான் இஸ்மாயில், கிள்ளானில் களமிறங்குவார் என்றும் மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

இந்த மாறுதலுக்குக் காரணம், லெம்பா பந்தாய் தொகுதியில் வாக்காளர் புள்ளிவிவரங்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் தான் என பிகேஆர் வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடங்கி, லெம்பா பந்தாய் தொகுதியில், காவல்படையைச் சேர்ந்த சுமார் 6,598 புதிய வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பிகேஆர் வட்டாரங்கள் கூறுகின்றன.

“செகாம்புட்டில் இருந்து 7,000 புதிய வாக்காளர்கள் வந்திருப்பதால், அவர் (நூருல்) தற்போது பின்தங்கிய நிலையில் இருக்கிறார். அப்படி இருந்தும் லெம்பா பந்தாய் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டுமா? கட்சியின் முக்கியத் தலைவர் போட்டியிடும் தொகுதி அபாயக்கட்டத்தில் இருந்தால், அவரை அப்படியே விடுவது கட்சியின் வியூகம் கிடையாது” என்றும் பிகேஆர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் தேசிய முன்னணியைச் சேர்ந்த ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடினுக்கு எதிராகக் களமிறங்கிய நூருல் இசா 1,874 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.