Home நாடு மஇகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மஇகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

991
0
SHARE
Ad

MIC Logo 440 x 215கோலாலம்பூர் – இந்தியர்கள் சார்ந்துள்ள அனைத்து மத ரீதியான பெருநாட்களையும் மஇகா சார்பில் கொண்டாடி வரும் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மஇகா தலைமையகத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டத்தில் மஇகாவில் பொறுப்புகளிலுள்ள  கிறிஸ்துவ மத உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொள்வதோடு, மற்ற மஇகா தலைவர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வர்.

மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிவார்.