Home கலை உலகம் மலேசியா வந்தடைந்தார் ரஜினிகாந்த்!

மலேசியா வந்தடைந்தார் ரஜினிகாந்த்!

1026
0
SHARE
Ad

Rajiniகோலாலம்பூர் – மை ஈவண்ட்ஸ் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூர் வந்தடைந்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ரஜினிகாந்திற்கும், அவரது மனைவி லதாவிற்கும், மஇகாவின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் மாலையும், சால்வையும் அணிவித்து வரவேற்பளித்தார்.

டி.மோகனுடன் மஇகா இளைஞர் கலை, கலாச்சாரப் பிரிவு மற்றும் மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் எமர்ஜென்சி உடன் இருந்தார்.