Home இந்தியா போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: கமல் வலியுறுத்து

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: கமல் வலியுறுத்து

769
0
SHARE
Ad

kamalhassanசென்னை – போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே கவனியுங்கள் என நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென நேற்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கமல், “தமிழக முதலமைச்சர் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.