Home இந்தியா தமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

தமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

1113
0
SHARE
Ad

tamil nadu-buses-file picசென்னை – தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென இன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பல இடங்களில் தமிழ் நாடு அரசு பேருந்துகள் நடுவீதியில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் இல்லம் திரும்ப முடியாமலும், தாங்கள் செல்ல நினைத்த இடங்களுக்குச் செல்ல முடியாமலும் சிரமங்களை எதிர்நோக்கினர்.