வாஷிங்டன் – பயங்கரவாதத்திற்குத் துணை போவதாகக் கூறி பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், இனி பாகிஸ்தானுக்குப் பாதுகாப்பு உதவியையும் நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
இது குறித்து டொனால்ட் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நௌரட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆஃப்கானில் உள்ள தலிபான்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவி, இராணுவ உதவி ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்திக் கொள்கிறது” என்று அறிவித்தார்.